“அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது”- விஜய்யை சந்தித்தது குறித்து கனிகா| Kanika spoke about her experience of meeting Vijay

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் “வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்’ என்று, தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தி நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கனிகா - விஜய்

கனிகா – விஜய்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து, நடிகை கனிகா வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், இன்று அவரை நேரில் பார்த்த அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது.

அவரது பாதுகாப்புப் படையினர் அவரை வேகமாக அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஒரு நிமிடம் நின்று, எங்களைக் கவனித்து, அன்பான சில வார்த்தைகளைப் பேசினார்.

வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *