திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? – தீவிர தேடுதலில் போலீஸ்! | tiruvannamalai – what happened to the 3 missing schoolgirl? – police conducting an intensive search

Spread the love

ஆனால், 3 பேரும் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு மீண்டும் வந்து பாட்டிக்குத் தெரியாமல் புத்தகப் பைகளை மறைத்து வைத்துவிட்டு, வெளியே சென்றுள்ளனர். மாலை நீண்ட நேரமாகியும் 3 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. மாணவிகளிடம் கொடுத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாம்.

இது குறித்து, கேரளாவில் உள்ள பெற்றோருக்கு உறவினர்கள் தகவல் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் நேற்று காலை கேரளாவில் இருந்து ஊருக்கு வந்திருக்கின்றனர்.

தீவிர தேடுதலில் போலீஸ்

தீவிர தேடுதலில் போலீஸ்

3 மாணவிகளும் எங்குப் போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பன பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், மாணவிகள் பயன்படுத்திய செல்போன் சிக்னலையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மாணவிகளை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதால் தண்டராம்பட்டு பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *