சூர்யாவின் “சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

மலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
‘பேரழகன்’ படத்திற்குப் பிறகு மலையாள சினிமா இயக்குநருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார் சூர்யா. இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். நேற்றைய தினம் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு துபாயில் நடைபெற்றது.