“அந்த மனசுதான் சார் கடவுள்”.. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர் | Muslim Man Distributes Diwali Firecracker Gift Boxes to 200 Families in Mayiladuthurai

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 குடும்பங்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை இஸ்லாமியர் வழங்கியதோடு, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துக்குப்பை ஊராட்சியின் 3-வது வார்டில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரியாஸ், கடந்த ஏழு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் தனது சொந்த செலவில் தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்.

Mayiladuthurai Diwali gift box

பட்டாசு கிப்ட் பாக்ஸ்

அந்த வகையில், வருகின்ற 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டும் தனது சொந்த செலவில் வார்டில் வசிக்கும் சுமார் 200 குடும்பத்தினருக்கும் பட்டாசு கிப்ட் பாக்ஸ் வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து அவர்களுக்கு வேட்டி, சட்டை, சேலை, ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பட்டாசு பாக்ஸ்களை வழங்கினார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவர்கள்

தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று கிராம மக்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கினார். இதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் உற்சாகத்துடன் பட்டாசு ‌பாக்ஸை எடுத்துச் சென்றனர். அப்போது, சிறுவர்களிடம் பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினரின் இந்த செயல் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *