“ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!| “A 5-crore deal under the rule of those ‘virtuous’ leaders eradicate corruption?” – TTV Dhinakaran!

Spread the love

ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களில் எதிர்க்கட்சியினர் என்றால் கைது நடவடிக்கை; இடைத்தரகர் வேலை பார்த்தாலும் அவர் சொந்தக் கட்சியினராக இருந்தால் சலுகை என்ற தவெக அரசின் இரட்டை வேடத்தைப் பார்க்கும்போது, “உனக்கு வந்தால் ரத்தம்; எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா?” என்ற நகைச்சுவைக் காட்சிகளைத்தான் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

எனவே, இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசியது யார் என்ற விவரத்தை வெளிப்படையாக வெளியிட்டு, அது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, இடைத்தரகர் வேலை பார்த்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி அவர்கள் மீதும், இப்பேர விவரத்தை இதுநாள் வரை மறைத்த பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ராஜ் மோகன் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *