அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு… ஒரே இடத்தில் தலைவர், தல, தல தோனி! என்ன நடந்தது தெரியுமா? – Kumudam

Spread the love

சென்னையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டாவது நாள் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகம், கிரிக்கெட் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

அனிருத் – காவியா மாறன் திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சென்னையில் சனிக்கிழமை பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

இரண்டாவது நாளிலும் குவிந்த நட்சத்திரங்கள்!

இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் கலந்துகொண்டார். நடிகர் அஜித், ரஜினிகாந்த், சிலம்பரசன், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளருமான முத்தையா முரளிதரன், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட விளையாட்டுத் துறை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒரே இடத்தில் திரண்ட திரையுலகமும் கிரிக்கெட் உலகமும்!

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் தோனி, அஜித், ரஜினிகாந்த், சிம்பு, நெல்சன் எனப் பல பிரபலங்கள் ஒரே இடத்தில் சங்கமித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *