International
oi-Mani Singh S
தெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து உள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய அணுமின் நிலையம் அருகே தாக்குதல் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஈரானின் பதிலடியால் ஜோர்டானில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது. இதனால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களை நிறுத்தியதாக அறிவித்த சில மணி நேரத்தில், ஈரானின் முக்கிய அணுமின் நிலையமான புஷெஹர் அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புஷெஹர் மாகாண அதிகாரி எஹ்சான் ஜஹானியன் கூறுகையில், “நண்பகல் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது” என்று கூறினார்.

எனினும் ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்ட நேரத்திற்கு முன்பே “ஈரான் மீது மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்ததாக” அமெரிக்க ராணுவத்தின் சென்ட்காம் அறிவித்திருந்தது. இதற்கு பதிலடியாக உடனே ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஜோர்டான் தலைநகர் அம்மான் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இதனால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அமெரிக்கா தாக்குதல் அதற்கு ஈரான் பதிலடி என தாக்குதல் தீவிரமான நிலையில், புஷெஹர் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் ஜோர்டானில் ஏவுகணை எச்சரிக்கை போன்ற சூழலால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.