“அபிஷேக் பச்சனும் மணி ரத்னம் மாதிரி மிமிக்ரி பண்ணினார்!” – ஜெயராம் |”Abhishek Bachchan also mimicked Mani Ratnam!” — Jayaram

Spread the love

ஜெயராம் பேசுகையில், “மணி ரத்னம் சார் மாதிரி நான் மிமிக்ரி பண்ணின வீடியோ பயங்கர வைரல் ஆகிடுச்சு. அப்போ, நான் சுஹாசினி மேம்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் மேடையில மிமிக்ரி பண்ணினேன்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டியது. ஆனா, தயாரிப்பாளர்கள் வரத் தாமதமானது. அப்போ மணி ரத்னம் சார் ஒரு லெட்டர்ல ‘ஸ்டேஜ்ல ஏதாவது பெர்பார்ம் பண்ண முடியுமா’னு கேட்டு அனுப்பினார்.

தொடர்ந்து, பிரபு சார்கிட்டையும் அனுமதி வாங்கி மேடையில பெர்பார்ம் பண்ணினேன். அப்போ பிரபு சார் ‘என்னை அசிங்கப்படுத்தப் போறீயா! நல்லதுதானே சொல்லப்போற, பண்ணு’னு சொன்னார். மணி ரத்னம் சார் மாதிரி எல்லோரும் மிமிக்ரி பண்ணிக் காட்டுவாங்க.

நான் மிமிக்ரி பண்ணின வீடியோவை பார்த்துட்டு நடிகர் அபிஷேக் பச்சனும் ‘நான் மணி சார் மாதிரி பண்றேன்’னு அவருடைய வெர்ஷனை செய்துகாண்பித்தார்.

ஆனால், அவர் முன்னாடி யாரும் அதனைச் செய்ய மாட்டாங்க” என்றவர், “நான் மிமிக்ரி பண்ணின வீடியோ வைரல் ஆன பிறகு பிரபு சார் ‘வீடியோ மில்லியன் போயிடுச்சுப்பா’னு போன் பண்ணி சொன்னார். பிறகு ‘மணி பசிக்குது மணி’னு அவரை சந்திப்பவர்கள் சொல்லும்போது எனக்குக் கால் பண்ணி அவர்களைக் காட்டுவார்.

இப்போ ‘மணி பசிக்குது மணி’னு கேரளாவுல ரெண்டு ஹோட்டல் திறந்துட்டாங்க. ஒரு பக்கம் என்னுடைய புகைப்படம், இன்னொரு பக்கம் பிரபு சாருடைய புகைப்படத்தை அந்த ஹோட்டல் பெயர் பலகையில பயன்படுத்தியிருந்தாங்க” என நகைச்சுவையாகப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *