அதனை நீங்கள் என்னுடைய இன்ஸ்டா ரீல்ஸிலும் பார்த்திருப்பீர்கள். என்னுடைய சகோதரி சாதனா எனக்கு மேல் சந்தோஷப்பட்டார். அவளுக்கும் அவ்வளவு சந்தோஷம்.
என் அப்பா, அம்மா தங்களின் மகள் இப்படி ஒரு பெரிய தேசிய விருதை வாங்கியிருக்கிறாள் என்று ஆனந்தமும் பெருமையும் கொள்கிறார்கள்.
ஆரம்பக் காலத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாகத்தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, ‘ஐயோ இது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது’ என்று அன்றைக்கே நான் சினிமாவை விட்டு விலகியிருந்தால், இன்று இந்த உயரத்திற்கு வந்திருக்க முடியாது.

அன்று நான் எதிர்கொண்ட எல்லா கஷ்டங்களுக்கும், உழைப்புக்கும் கிடைத்த ஒரு மாபெரும் பலனாகத்தான் இந்தத் தேசிய விருதை நான் பார்க்கிறேன். இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் சார் அழைத்து எனக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அதுபோல, படக்குழுவினர் பலரும் வாழ்த்தினார்கள். நிச்சயமாக இந்த விருது எனக்கு மிகப்பெரிய பூஸ்ட். இனிவரும் காலங்களிலும் இதேபோல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து, இன்னும் பல விருதுகளை வாங்க வேண்டும் என்ற ஒரு எனர்ஜியை இந்த அங்கீகாரம் எனக்குக் கொடுத்திருக்கிறது” என்றார் உற்சாகத்துடன்.