அமுதன் கொலை: “பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை” – அமைச்சர் சம்பத் குமார்| “There is no truth to the allegation that the complaint from the parents was refused” – Sampath Kumar.

Spread the love

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதில் அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்லூரியில் கஞ்சா புழக்கம் குறித்து தகவல் அளித்ததாலேயே அமுதன் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டிற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், அமைச்சர்கள் சம்பத் குமார், வன்னி அரசு ஆகியோர் கள்ளக்குறிச்சியில் உள்ள அமுதன் இல்லத்துக்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சம்பத், “மாணவர் அமுதன் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ. 6 லட்சம் நிதி உதவிக்கான ஆணையை வழங்கியுள்ளோம். மேலும், அமுதனின் குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரது சகோதரர் பி.பார்ம் படித்துவரும் நிலையில், அவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *