பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு ஆல் அவுட்.. தோற்ற இடத்திலேயே எழுந்த வங்கதேசம்! ஆடிப்போன ஆஸ்திரேலியா | Bangladesh Shock Australia by 9 Wickets in 1st Test After 54-Run Warm-Up Disaster at the same Stadium

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

டார்வின்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணி வெறும் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆனால் அதே பேட்டிங் வரிசையை வைத்து அதே பிட்சில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருக்கிறது.

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி முதல்முறையாக வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 31 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை இலங்கை, பாகிஸ்தான் அணிகளே வீழ்த்தியதில்லை.

Bangladesh

இந்தியாவுக்கு பின் ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய அணியாக வங்கதேசம் உருவாகி இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் அணி விளையாடியது. அந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி வெறும் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிய தாம்சன் 8 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்தப் போட்டியும் டார்வின் மைதானத்திலேயே நடைபெற்றது. எந்த மைதானத்தில் 54 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல் அவுட்டானதோ, அதே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்து மரண கம்பேக்கை நிகழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி வழக்கமாக இந்த மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாது. மெல்போர்ன், காபா, சிட்னி, அடிலெய்டு, ஆப்டஸ் மைதானங்களில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும். ஆனால் வங்கதேச அணிக்கு இந்த மைதானமே போதும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கருதியது. தற்போது அதுவே ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் சிக்கலாக மாறி தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் இந்த மைதானத்தில் பிட்ச் எப்படி செயல்படும் என்று தெரியாமலேயே ஆஸ்திரேலியா வீரர்கள் களமிறங்கினர். ஆனால் வங்கதேச அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாடி பிட்சை கணித்துவிட்டது. இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *