அமெரிக்காவில் சாதனை படைத்த ரோஜாவின் மகள்: அன்ஷு மாலிகா வென்ற உயரிய ‘ஹெர்மன் பி வெல்ஸ்’ விருது!

Spread the love

ரோஜாவின் நெகிழ்ச்சிப் பதிவு

தனது மகளின் இந்த மிகப்பெரிய சர்வதேசச் சாதனையைக் கொண்டாடும் வகையில், ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே. செல்வமணி இருவரும் அமெரிக்கா சென்று பல்கலைக்கழகத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நேரில் கலந்துகொண்டனர்.

இது குறித்து ரோஜா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “கனவுகளில் இருந்து இலக்கை நோக்கிய பயணம்… இண்டியானா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க விருதை வென்று எங்கள் மகள் சரித்திரம் படைத்துள்ளாள். ஒரு சிறிய கனவாகத் தொடங்கியது, இன்று எங்களுக்கு மிகப்பெரிய பெருமையையும், பலருக்கும் உத்வேகத்தையும் தரும் தருணமாக மாறியுள்ளது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தைரியம் உன்னை இங்கு கொண்டு வந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே,” என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அன்ஷு Herman B Wells விருது

அன்ஷு Herman B Wells விருது

அரசியல், சினிமா என்ற வலுவான பின்னணியில் இருந்து வந்தாலும், தனது சொந்த உழைப்பாலும், கல்வித்திறனாலும், சமூக அக்கறையாலும் அன்ஷு மாலிகா அமெரிக்க மண்ணில் இந்த உயர்ந்த விருதைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்க விஷயம். ஒரு மாணவியாகக் கல்வியிலும், சமூகப் பொறுப்பிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *