அமெரிக்காவையே அலற விட்ட ஹேக்கர்கள்.. விமானப்படை தகவல்களை சேமித்து வைக்கும் ‘கிளவுட் ஒன்’ அட்டாக்! | Hackers Breach US Air Force’s Flagship Cloud One Computing Platform

Spread the love

International

oi-Vignesh Selvaraj

வாஷிங்டன்: அமெரிக்க விமானப்படையின் முக்கியத் தகவல்களைச் சேமித்து வைக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தை ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விமானப்படையின் முக்கியமான கிளவுட் கட்டமைப்பான ‘Cloud One’ தளத்தில் இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்க ராணுவத்தின் முக்கியத் தகவல்கள் ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Hackers Breach US Air Force s Flagship Cloud One Computing Platform

அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய கிளவுட் தளங்களில் ஒன்றாக Cloud One செயல்பட்டு வருகிறது. இதில் ராணுவ நடவடிக்கைகள், வீரர்கள் தொடர்பான விவரங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான முக்கியத் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட், அமேசான், ஆரக்கிள் மற்றும் ஆல்பபெட் ஆகிய நான்கு கிளவுட் மேனேஜர்களின் சேவைகளைப் பயன்படுத்தி கிளவுட் ஒன் தளம் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் இந்தத் தளத்தில் ஹேக்கர்கள் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து அறிந்தவர்கள் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளனர். கணினி அமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றபோது இந்த சைபர் தாக்குதல் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இதனால் Cloud One தளத்தின் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவின் துறைமுகங்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறைமுகங்கள், எண்ணெய் டேங்கர்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் கணினி அமைப்புகளை ஹேக்கர்கள் குறிவைத்து வருகின்றனர்.

இந்த சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான், வடகொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கலாம் என இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக FBI விசாரணை நடத்தி வருகிறது.

பென்டகனில் ஏற்பட்ட சைபர் பாதுகாப்பு மீறல் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. சேதத்தை மதிப்பிடுவதற்காக, அமெரிக்க இராணுவத்தின் இணையப் பாதுகாப்புப் படையான சைபர் கமாண்டை புலனாய்வாளர்கள் வரவழைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளவுட் ஒன் நீண்ட காலமாகவே ஹேக்கர்களின் இலக்காக இருந்து வருகிறது. 2023-ஆம் ஆண்டில் ஃபெட்ஸ்கூப் என்ற இணையப் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், கிளவுட் ஒன் தலைமை, தங்கள் தளத்திற்குள் ஊடுருவ நடந்த மிக அதிக எண்ணிக்கையிலான முயற்சிகளை முறியடிப்பதில், தாங்கள் 100% வெற்றி விகிதம் பெற்றதாகக் கூறிப் பெருமைப்பட்டது. இந்தச் சூழலில் கிளவுட் ஒன் தளத்தில் நடந்துள்ள ஹேக்கிங் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *