“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”.. திருப்பரங்குன்றம் வழக்கு தீர்ப்பை வரவேற்ற பிரதமர் மோடி! | PM Modi Welcomes Supreme Court Order on Thirupparankundram Deepam, Says Arogara

Spread the love

India

oi-Vignesh Selvaraj

டெல்லி: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என திருப்பரங்குன்றம் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல் தூணில் ஒருமுறை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி இடைக்கால உத்தரவு வழங்கியது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கல் தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

PM Modi Welcomes Supreme Court Order on Thirupparankundram Deepam Says Arogara

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல் தூணில் நாளை பக்தர்கள் தீபம் ஏற்ற வேண்டும். தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம். மலை அமைந்துள்ள முழு பகுதியையும் CRPF பாதுகாப்பு படையினை நிறுத்த வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்ப உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இந்த உத்தரவை பாஜக தவிர தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பதிவை வெளியிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *