முதல்வரின் கோபம் இன்னும் குறையவில்லை என்பதற்கு அதுவும் ஒரு சமிக்ஞைதான். இதைத்தொடந்துதான் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தும் மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பு எதிலும் கில்லி சரத்தை தலைமை சேர்க்கவில்லை. ஆனாலும் நாட்போக்கில் அந்த போதைப் பொருள் விவகாரம் அப்படியே கடந்து போய் விடும். மேலும், முதல்வர் முதல் நடவடிக்கையாக ரசிகர் மன்றத்திலிருந்து வந்தவரின் மீது கைவைக்கமாட்டார் என சரத் தெம்பாக இருந்தார்.
இந்நிலையில்தான் அறப்போர் இயக்கம் குண்டை தூக்கிப் போட்டது. தாம்பரம் மாநகராட்சியில் நடந்த டெண்டர் ஊழலை அம்பலப்படுத்தியது. விவகாரம் உண்மையென தெரிந்தவுடன் முதல்வர் அலுவலகம் உடனடியாக மாநகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிவிட்டது.
முதல்வர் அலுவலகத்தின் வேகமான நடவடிக்கையை கண்டு உளவுத்துறையும் உஷாராகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு சம்பந்தப்பட்டவர்களின் கைங்கரியம் இருக்கிறதா என விசாரிக்க தொடங்கியிருக்கிறது. முதல்வர் லண்டனிலிருந்து வந்தவுடன் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் சம்பந்தமான முதல்வரின் டேபிளுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
‘தப்பு பண்றவங்க யார் இருந்தாலும் தூக்கி எறிஞ்சிடுவேன். ஜாக்கிரதையா இருங்க!’ என அமைச்சரவை கூட்டத்திலேயே முதல்வர் எச்சரித்திருக்கிறார். அதன்பிறகும், முதல்வரின் துறையிலேயே கை வைத்திருக்கின்றனர். இதை அத்தனை எளிதாக முதல்வர் கடந்துவிடமாட்டார். உளவுத்துறை முதல்வருக்கு கொடுக்கப்போகும் நோட்டில்தான் கில்லி சரத்தின் எதிர்காலம் இருக்கிறது’ என்கின்றனர்.
‘முதல்வர் கில்லி சரத் விவகாரத்தை சீரியஸாக அணுகினாலும் இடைத்தேர்தல் முடிவதற்கு முன்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கமாட்டார் என்கின்றனர்’ தவெகவின் வியூகப் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்கள். மேலும் பேசியவர்கள், ‘இடைத்தேர்தலுக்கு முன்பாக பதவியை பறித்தால் எதிர்க்கட்சிகள் அதையே பிரசாரமாக மாற்றிவிடுவார்கள். மேலும், மதுராந்தகம் தொகுதிக்குள் சில சமூகக் கணக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் இடைத்தேர்தல் ரிசல்ட் வரைக்கும் கில்லி சரத்தின் பதவிக்கு பிரச்னை இருக்காது’ என்கின்றனர்.
அமைச்சரவையில் இடம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. சூதானமாக நடந்து கொள்ளாமல் முதல்வருக்கு தொடர்ந்து சங்கடத்தை கொடுப்பதால் அமைச்சரவையின் முதல் விக்கெட்டே கில்லி சரத்தாக இருக்க அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக அறுதியிட்டு கூறுகின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.!