₹4,000 மதிப்புள்ள Canva Subscription இனி இலவசம்: Jio-வின் புதிய சலுகை – யாரெல்லாம் பெறலாம்? \ Jio’s New Offer: Free Canva Subscription, Who’s Eligible

Spread the love

Canva-வில் போஸ்டர், Presentation, Resume, Instagram post என பலவற்றை உருவாக்குபவர்களுக்கு, Jio தற்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது. Jio மற்றும் Canva இணைந்து, தகுதியுள்ள Jio வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்கள் வரை Canva Pro அல்லது Canva Pro Lite-ஐ கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றன. இந்தச் சலுகை செப்டம்பர் 16, 2026 முதல் கிடைக்கிறது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்தச் சலுகை அனைத்து Jio பயனர்களுக்கும் ஒரே மாதிரியாக கிடையாது. நீங்கள் பயன்படுத்தும் Jio recharge plan-ஐப் பொறுத்தே Canva Pro அல்லது Pro Lite கிடைக்கும்.

₹399 Jio plan-ஐ recharge செய்யும் தகுதியுள்ள பயனர்களுக்கு 12 மாதங்கள் Canva Pro கிடைக்கும்.

அதேபோல், ₹ 349plan மற்றும் ₹ 349-க்கு மேல் உள்ள தகுதியான 2GB/day plans பயன்படுத்துபவர்களுக்கு Canva Pro Lite 12 மாதங்களுக்கு கிடைக்கும்.

அதாவது, “Jio SIM இருந்தாலே Canva Pro இலவசம்” என்பது சரியல்ல. Eligible recharge plan தேவை.

எப்படி பெறுவது?

சலுகையைப் பெறுவதற்கான activation MyJio app மூலம் செய்யலாம். Eligible recharge செய்த பிறகு MyJio app-ல் Canva offer-ஐத் திறந்து activation செய்ய வேண்டும். பின்னர் Canva account-ல் login அல்லது account creation செய்து subscription-ஐ activate செய்யும் நடைமுறை வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *