`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?’ – தங்கம் தென்னரசு |Power Outage During Minister’s Event: DMK Trade Union Engineer Suspended, Thangam Thennarasu Condemns Actio

Spread the love

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் பணி நீக்க ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியை பழிவாங்கும் தவெக அரசின் அதிகார அத்துமீறல்! அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களை பலிகடா ஆக்குவதா ?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின் பொறியாளர் திரு. அ. அண்ணாதுரை அவர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 மின்வெட்டு

மின்வெட்டு

ஒரு அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்படுவது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார், தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “மின்வெட்டா’ என்பதையெல்லாம் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *