2. லெபனான் உள்ளிட்ட எந்த மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் இருக்கக்கூடாது என்பது தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் பாயிண்ட். இதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானுக்கு பிடிக்கவில்லை.
அதனாலும், ஈரானும், அமெரிக்காவும் முரண்படுகிறது.
இது ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மட்டும் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தான். ஆனால், ஈரான் போரை அமெரிக்கா, இஸ்ரேல் இரு நாடுகளும் கூட்டாக தொடங்கியதால், அமெரிக்கா இஸ்ரேலை லெபனான் தாக்குதலில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈரான் எதிர்பார்க்கிறது.

3. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான், அமெரிக்கா இடையே ஏற்படும் முட்டல், மோதலுக்கு மிக முக்கிய காரணம். ட்ரம்ப் அவ்வப்போது ஈரானை எதிர்த்து எதாவது சொல்லிவிடுகிறார். அது ஈரானுக்கு பிடிப்பதில்லை. அதற்கு பதிலடியாக ஈரான் எதிர்வினையாற்றுகிறது.
இதுவும் ஈரான், அமெரிக்கா இடையே இன்னும் தாக்குதல்கள் நடந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம்.
உதாரணத்திற்கு, கடந்த 21-ம் தேதி ஈரான், அமெரிக்கா குழுக்களுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ட்ரம்ப் அமெரிக்காவில், “ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரான் மீண்டும் திறக்கவில்லை என்றால், அந்த நாடு முற்றிலும் அழிக்கப்படும். அந்த நாட்டில் இருந்து வந்திருக்கும் பேச்சுவார்த்தைக் குழு கடத்தப்படும்” என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
இது உடனே ஈரான் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாஃப் காதுகளுக்கு எட்டவே, குழு புகைப்படத்தில் கலந்துகொள்ளாமல், பாதியிலேயே பேச்சுவார்த்தை நிகழ்வில் இருந்து கிளம்பினார்.