`நடிகர் சூர்யா அரசியலுக்கு வருகிறாரா?’- நற்பணி மன்றம் கொடுத்த அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன?

Spread the love

அகில இந்தியா சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ” காலம் முடிவு செய்துவிட்டது.

கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று நிர்வாகி வீரமணி என்பவர் பேசியிருந்தார்.

இது இணையத்தில் வைரலான நிலையில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் இது தொடர்பாக அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அதிகாரபூர்வ விளக்கமளித்திருக்கிறது.

நற்பணி இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “28.06.2026 அன்று நடைபெற்ற மாநில-மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட திரு.இரா.வீரமணி அவர்கள்,

`இது என்னுடைய தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாகக் குறிப்பிட்ட பின்னரே தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *