25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. மாணவர்களை விரைவில் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாணவர்கள் வெளிநாடு புறப்படும் முன் விசா, விமானக் கட்டணம் மற்றும் கல்விக்கட்டண முன்பணம் போன்ற ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்க அரசு உதவுகிறது.
இதற்காக, நடப்பு ஆண்டில் தேர்வான மாணவர்களுக்கு தாட்கோ (TAHDCO) மூலம் 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலிருந்து தாட்கோவிற்கு ஈடுசெய்யப்படும்.

கல்வி உதவித்தொகை வழங்கும் முறை
கல்விக் கட்டணம் பல்கலைக்கழகக் கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்படுகிறது. மொத்த ₹36 லட்சம் வரம்பை மீறாத மீதமுள்ள தொகை (விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட செலவுகள்) மாணவர் கணக்கிற்கு விடுவிக்கப்படுகிறது.
அனைத்து உதவித்தொகைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மாணவர்களுக்கான விளக்கங்களுக்கான பிரத்யேக மின்னஞ்சல் வாயிலாக செயலாக்கப்படுகின்றன. மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்வித தாமதமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.