இந்திய ரயில்வே துறை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
> இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.
> வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட் வழக்கமான பதிவு மூலம் மட்டுமே புக் செய்ய முடியும்.
> வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் புக் செய்யப்படும்போது, உறுதி செய்யப்பட்ட பெர்த் மட்டுமே கிடைக்கும்.
இனி இந்த வகை ரயிலில் ஆர்.ஏ.சி நடைமுறையோ, வெயிட்டிங் லிஸ்ட்டோ கிடையாது.
இதனால், இந்த ரயிலில் பயணிக்க டிக்கெட் புக் செய்வதைத் தள்ளிப்போடாமல், முன்பே டிக்கெட் புக் செய்துவிடுவது நல்லது.
> பயணத் தேதி நெருங்க நெருங்க, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் கட்டணம் உயரும் நடைமுறை இனி கிடையாது.
தமிழ்நாட்டில் ஏதேனும் மாறுதல்?
தமிழ்நாட்டில் இதுவரை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ்கள் தான் உள்ளன.