அய்யா சாமி ரொம்ப நன்றிங்க ! AVENGERS DOOMSDAY-வின் DOOM-ஆக OG ரவி சங்கர் குரல் ! – Kumudam

Spread the love

உலகமெங்கும் அவென்ஜ்ர்ஸ் என்றாலே மார்வெல் ரசிகர்களின் மத்தியில் தனி இடம் உண்டு. அதிலும் அயன் மேன் என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிடித்த சூப்பர் ஹீரோ ஆவார். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு அயன் மேன் தொடங்கி அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் வரை பிடித்தமான சூப்பர் ஹீரோவாக இருந்த அயன் மேன் 2019-ஆம் ஆண்டு வெளியான அவென்ஜர்ஸ் எண்ட்கேம் வந்தபொழுது முழுவதுமாக ஏமாற்றமடைந்துவிட்டார்கள். ஏனென்றால் சிறு வயது முதல்  தமிழ் ரசிகர்களுக்கு அயன் மேன் என்றால் ராபர்ட் டிரௌனி ஜூனியர் தான் என்று தோற்றமளவு தெரிந்தாலும் அவரது குரல்தான் தமிழ் அயன் மேனுக்கு அடையாளம். அப்படியிருக்கையில், எண்ட்கேம் வந்தபோது அயன் மேனாக உச்ச நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்திருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்னாள் இந்த விஷயம் தெரிந்தாலும், சரி என்ன பெரிய மாற்றம் வந்துவிட போகிறது என்ற எண்ணத்தில் தியேட்டருக்குள் நுழைந்தவர்கள் அனைவர்க்கும் அப்போதுதான் புரிந்தது அயன் மேனுக்கு  பழைய குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் ரவி சங்கரின் குரல் தான் கச்சிதமான பொருத்தமாகும் என்று. பல படங்களில் நாம் விஜய் சேதுபதியை கண்டு ரசித்துள்ளோம் அவரது குரலில் வசனம், நடிப்பு என்பதெல்லாம் நம்மை கைத்தட்டவைத்திருந்தாலும் அயன் மேனாக அவரது குரல் வரும்போது, அயன் மேன் எங்கே என்று ரசிகர்களை திரையில் தேடவைத்துவிட்டது. ரவிசங்கரின் குரலிலேயே சிறு வயது முதல் அயன் மேனை கண்டுரசித்து வந்த நாம், விஜய் சேதுபதியின் குரலில் அவர்தான் தெரிந்தாரே தவிர அயன் மேன் திரையின் பின்னே புதைந்து விட்டார்.  இதன் விளைவாக, தமிழ்நாட்டில் எண்ட் கேம் படத்தை தமிழில் பார்க்கவேண்டும் என்று எண்ணியவர்கள் கூட படம் பார்த்து வந்தவர்களின் விமர்சனங்களால் ஆங்கிலத்திலேயே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

உலகமெங்கும், வரும் டிசம்பர் 17-ம் தேதி அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதில்வரும் விக்டர் வான் டூம் கதாபாத்திரத்துக்கு தமிழில் யார் டப்பிங் கொடுப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு மார்வெல் ரசிகர்களுக்கு இருந்துவந்தது. சமீபத்தில், டூம்ஸ்டே படத்தின் உலகத்தை எளிதில் தொடர்புபடுத்திக்கொள்வதற்காக அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படத்தில் சில டூம்ஸ்டே லீட் காட்சிகளை இணைத்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்தனர். ஆனால், அப்போதுகூட தமிழ் பதிப்பில், பழைய அயன் மேன் குரலை டப்பிங் செய்து வெளியிடுவார்கள் என்று பெரிது எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். 

ஆனால், தற்போது தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவென்ஜர்ஸ் டூம்ஸ்டே படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான விக்டர் வான் டூமாக நடிக்கும் ராபர்ட் டிரௌனி ஜூனியர் கதாபாத்திரத்துக்கு தமிழில் OG அயன் மேன் குரலான ரவி ஷங்கர் தான் டப்பிங் செய்திருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. ஏனென்றால், அயன் மேனும் டூமஸ்டே படத்தில் வருகிறார் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அப்படியிருக்கையில், நேற்று முன்தினம் டூமஸ்டே படத்தின் ஸ்பெஷல் லுக் டீசரை படக்குழு அணைத்து மொழிகளிலும் வெளியிட்டது. அந்த டீசரின் இறுதியில், விக்டர் வான் டூம் ” நான்தான் டூம்” என்ற டயலாக்கை பழைய அயன் மேன் குரலான ரவி சங்கரின் குரலில் கேட்கும்பொழுது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். நல்ல வேலை விஜய் சேதுபதி டப்பிங் செய்யவில்லை என்றதும் நிம்மதி பெருமூச்சுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் டீசரை டேக் செய்து வைரலாக்கி வருகின்றனர். 

அவென்ஜர்ஸ்  டூம்ஸ்டே படம் வரும் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகிறது என்ற சந்தோசத்தை விட OG அயன் மேனையும், டாக்டர் விக்டர் வான் டூமையும் டப்பிங் கலைஞர் ரவி சங்கரின் குரலில் பார்க்கப்போகிறோம் என்ற நற்செய்தியும், ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

LINK : https://youtu.be/Gywm6HI8iEQ?si=6w0hpAezKoa7EqNI

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *