தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “மூக்குத்தி அம்மன்- 2′ படம் வெளியாக இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சுந்தர்.சி, ” இந்தப் படத்தில் இதுவரை எந்த படத்துக்கும் போடாத ஒரு உழைப்பை போட்டு இருக்கிறேன். நான் என்றைக்குமே ஹீரோவுக்காக கதை எழுதியதில்லை.
நான் எழுதிய கதைக்கு தான் நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஒரு ஐடியா என்னிடம் இருந்தது. ஆனால் அது அம்மன் கதையாக இல்லை. அந்த சமயத்தில் தான் ஐசரி சார் ‘மூக்குத்தி அம்மன் – 2’ நீங்கள் எடுக்குறீர்களா? எனக் கேட்டார். அது தெய்வீக சக்தி போல் இருந்தது.