அரசு தேர்வுகளுக்கு முதல் முறையாக தயாராகும் தேர்வர்கள்; முதல் 3 மாதங்களை எப்படித் திட்டமிட வேண்டும்?| First-Time Aspirants Preparing for Government Exams: How to Plan the First 3 Months?

Spread the love

“UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , Dr. P.விஜயகுமார், IPS இணை ஆணையர், பெருநகர சென்னை தெற்கு (சட்டம் & ஒழுங்கு), Dr. சத்யஸ்ரீ பூமிநாதன் இயக்குநர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, திரு.ஆதில் பெய்க் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசுத் தேர்வுகளுக்கு முதல் முறையாகத் தயாராகத் தொடங்கும் தேர்வர்கள் தனது முதல் 3 மாதங்களை எப்படித் திட்டமிட வேண்டும்? என்ற கேள்வியுடன் திரு. ஆதில் பெய்க்கை ( சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர்) தொடர்புக்கொண்டு பேசினோம்.

நம்மிடம் பேசிய அவர், “அரசுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கும் புதிய மாணவர்கள், தங்களது முதல் மூன்று மாதங்களைச் சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்துவது தேர்வின் வெற்றிக்கு மிக முக்கியமான தொடக்கமாக அமையும். எந்த ஒரு தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பும், அத்தேர்வின் அமைப்பைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *