TN Assembly: “இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் போதைப்பொருளைப் பவுடராக நுணுக்கி என்ன செய்தார் என்பதை.!”- உதயநிதி| Live | Live | Live Update | tn assembly live update dated 17-08-2026

Spread the love

” ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது”- உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் இன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ” கோவையில் கல்லூரி மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்; இது கோஷ்டி மோதல் அல்ல.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

போதைப்பொருள் கும்பல் குறித்து காவல் துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை அரசின் அலட்சியத்தால், போலீஸின் பொறுப்பற்ற போக்கால் தான் நடந்தது. போதை கலாசாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ” ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. 100 நாள் சாதனை என அரசு பெருமை பேசும் வேளையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு நடந்து வருவதே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *