அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் – எச்சரித்த போலீஸாரை கடுமையாக தாக்கியதால் அதிர்ச்சி!

Spread the love

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிகின்றனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் நேற்று இரவும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. அந்த ஆலைக்கு அருகே இருக்கும் லாரி செட் முன்பு அமர்ந்து மூன்று பேர் மது குடித்துள்ளனர்.

தாக்கப்பட்ட அரியலூர் போலீஸ்

தாக்கப்பட்ட அரியலூர் போலீஸ்

இதைப்பார்த்த ராஜகண்ணுவும், வெங்கடேசனும் ராத்திரி 12 மணி ஆகிடுச்சி, இன்னும் மது குடித்து கொண்டிருக்கிறீர்கள் என்று கண்டித்துள்ளனர். மேலும் உடனே கிளம்ப வேண்டும், நாங்க திரும்பி வரும் போது நீங்க இங்கு இருக்கக் கூடாது என எச்சரித்து விட்டு சென்றவர்கள், முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, அதிகாலை 2 மணி அளவில் அந்த போலீஸார் திரும்பி வந்த போது, அந்த மூன்று பேரும் விநாயகர் கோயில் அருகில் உள்ள மரப்பட்டறை சந்தில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *