அரிய கனிமங்கள்.. அபரிமிதமான பணம் பார்க்கும் சீனா! லாபம் மட்டும் எவ்வளவுனு பாருங்க | AI Chip Boom: How China Is Profiting From the Rare Minerals Behind the Global AI Race

Spread the love

International

oi-Halley Karthik

பெய்ஜிங்: மொத்த உலகமும் தற்போது AI நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. சந்து பொந்தெல்லாம் டீ கடைகள் மாதிரி AI ஸ்டார்ட்அப் கம்பெனிகள் முளைக்க தொடங்கியிருக்கின்றன. AI சிப் தயாரிக்க அரிய வகை கனிமங்கள் தேவை. இதை விற்று தற்போது சீனா பெரிய அளவில் லாபம் பார்த்திருக்கிறது.

சீனாவின், சீனா நார்தர்ன் ரேர் எர்த் (CNRE) நிறுவனம் லைட் லெவல் ரேர் எர்த் மெட்டீரியல்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 2 மடங்கு லாபம் பார்த்திருக்கிறது. இதன் லாபம் ரூ.5,142.49 கோடியாக இருக்கிறது.

AI Chip Boom

அதேபோல, ‘சீனா ரேர் எர்த் ரிசோர்ஸ்’ என்கிற நிறுவனம் ஹெவி ரேர் எர்த் மெட்டீரியல்களை ஏற்றுமதி செய்கிறது. இந்நிறுவனத்தின் லாபமும் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்தது. விலை கடுமையாக சரிந்தது. அப்போது பிரச்சனையை சரி செய்ய, இந்த 2 நிறுவனங்களுக்கு மட்டும் கனிம ஒதுக்கீடுகளை சுருக்கியது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் கனிமங்களையும் வரம்புக்குள் கொண்டுவந்ததால்.. ராக்கெட் வேகத்தில், கனிமங்களின் விலை உயர்ந்தது.

அரிய வகை கனிமங்களுக்கு என்னைக்குமே மவுசு அதிகம். பாதுகாப்பு, விண்வெளி, AI துறைகளுக்கு பயன்படுத்தப்படும் சிப்களுக்கு இந்த கனிமங்கள் தேவைப்படுகின்றன. இந்த கனிமங்களை வைத்துதான் சிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. சிப்புகள் இல்லையெனில், ஒன்றுமே இல்லை. கனிமங்கள் இல்லையெனில் இந்த சிப்புகளே இல்லை. எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்த கனிமங்களின் ரேட் அதிகரித்துள்ளது.

அதேபோல மறுபுறம், பவர்புல் சிப்புகளை சீனாவுக்கு தர அமெரிக்க மறுத்துவிட்டது. எனவே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கனிமங்களின் அளவை சீனா குறைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்த அரிய வகை கனிமங்கள் இருக்கின்றன. ஆனால், இதை மண்ணிலிருந்து பிரித்து எடுப்பது.. கடலில் பெருங்காயத்தை கொட்டிவிட்டு தேடும் கதையை போன்றது. இருப்பினும்.. உலகில் சீனா மட்டும்தான் இந்த வேலையை சரியாக செய்யும் ஒரே நாடு. எனவே, மொத்த உலகமும் இப்போது கனிமங்களுக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்கின்றன. எனவே சீனாவுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *