அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

Spread the love

“லார் கிப்பன்’ (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த விவகாரம் வனத்துறையின் கவனத்திற்குச்‌ சென்ற நிலையில், விக்ரம் மட்டுமன்றி மனித குரங்கை வாங்கியவர்கள், விற்பனை செய்தவர்கள், இடைத்தரகர்களாக இருந்தவர்கள் எனப் பலரிடம் வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரிலிருந்து 3 லார் கிப்பன் குரங்குகளை ஈரோட்டுக்குக் கொண்டுவந்து பண்ணையில் வைத்திருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரது பண்ணையிலும் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இவரது பண்ணையில் இருந்துதான் அந்த கிப்பன் குரங்கு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு விற்பனை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக கேசவநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *