NALSAR மாணவர்கள் எதிர்ப்பு: சூர்ய காந்த் சொன்ன அதிரடி கருத்து|NALSAR Students Protest CJI Surya Kant Invite: What Happened?

Spread the love

இந்தப் பிரச்னை வெளிச்சத்திற்கு வர, இந்திய பார் கவுன்சில், “மறு உத்தரவு வரும் வரை 2026-ஆம் ஆண்டு நால்சார் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் எவரையும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய வேண்டாம்” என்று ஐதராபாத் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.

மேலும், பட்டமளிப்பு பிரச்னைக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது இந்திய பார் கவுன்சில்.

பார் கவுன்சில்

பார் கவுன்சில்

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது NALSAR பல்கலைக்கழகம். இந்த வழக்கை விசாரித்தது சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள்.

இந்த வழக்கு விசாரணையில் சூர்ய காந்த், “இதற்கும் பார் கவுன்சிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம். மாணவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கும் எனக்குமான ஒரு உரையாடல்.

இதில் சம்பந்தமே இல்லாமல் சுற்றறிக்கை வெளியிட இவர்கள் யார்?

நான் கல்லூரியில் படித்த காலத்தில் மாணவர் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறேன். சில நேரங்களில் மாணவர்கள் சொல்வது தவறாகவே இருந்தாலும், அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டுத் தங்கள் குரலை உயர்த்தும்போது அதை அனுமதிக்கத்தான் வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *