அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி | Tenkasi TVK cadres fighted in road Arunraj got anger

Spread the love

Tamilnadu

oi-Pavithra Mani

தென்காசி: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெக வந்துள்ளது. ஆனால் ஆட்சியிலும், கட்சியிலும் பெரிய மாற்றங்கள் இல்லை. தவெகவிலும் உள்கட்சி பூசல் அதிகமாக உள்ளது. தென்காசியில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவர் கண் முன்பு தவெகவினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அருண்ராஜ் காரில் இருந்து இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறி கோபமாக சென்றார்.

தவெக மற்றும் இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி இணைந்து, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். வாசுதேவநல்லூர் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமை தொடக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தவெக நிர்வாகிகளிடையே உள்கட்சி பூசல் ஏற்பட்டது.

Tenkasi TVK

தவெக உள்கட்சி பூசல்

தென்காசி மாவட்ட செயலாளர் தரப்புக்கும், மற்றொரு தரப்பும் இடையே மோதலில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் இருந்தே பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. அருண்ராஜ் வந்தபோதும் பிரச்சனை வெடித்துள்ளது. இதுகுறித்து அருண்ராஜ்க்கு தகவல் சென்றுள்ளது. பிரச்சனை சரியாகியிருக்கும் என்று நினைத்து அருண்ராஜ் முகாமை தொடக்கி வைப்பதற்கு புல்லுக்காட்டு வலசை சென்றுள்ளார்.

அவருக்கு வரவேற்பு கொடுப்பதிலும் தவெக நிர்வாகிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அருண்ராஜ் அதிர்ச்சியடைந்துள்ளார். காரை விட்டு இறங்கிய அருண்ராஜ் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வந்த வேகத்திலேயே அருண்ராஜ் காரில் ஏறி சென்றுவிட்டார். இதனால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அருண்ராஜ் சென்றதை வைத்து தவெக நிர்வாகிகளிடையே மீண்டும் பிரச்சனை வெடித்தது. இரு தரப்பினரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அருண்ராஜ் கோபம்

ஒருகட்டத்தில் அது தள்ளுமுள்ளாக மாறியது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமாதனப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக புதிய கட்சி. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர்களிடையே உள்கட்சி பூசல் ஏற்படுவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் நடைபெற்ற சம்பவம் குறித்து தவெக தலைமையில் இருந்து விசாரித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *