இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.
தேவா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேவாவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் வடிவேலு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
“அண்ணன் தேனிசை தென்றல்… உண்மையிலேயே அவர் தென்றல் தான். அவர் இறந்த செய்தியைக் கேட்கும்போது ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.