அருள் விக்னேஷ் விவகாரம்! கனிமொழி reveal செய்தது முதல் சிருஷ்டி சிங் டீம் கைது வரை! நடந்தது என்ன? | What happened in Kallakurichi TVK MLA Arul Vignesh case starting from his arrest?

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கள்ளக்குறிச்சி: பெண் ஆட்சியருக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் புகார் கூறியிருந்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் இன்றைய தினம் அருள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆபாச மெசேஜ் அனுப்பியது முதல் தற்போது வரை நடந்தது என்ன?

Kallakurichi TVK MLA Arul Vignesh case

மே 10- தவெக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது.

மே 29- 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். (அதில் ஒரு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பெண் ஆட்சியருக்குத்தான் இந்த ஆபாச மெசேஜ் தொல்லை நடந்தது)

ஜூலை மாதம் – ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினார் அருள் விக்னேஷ் (தேதி உறுதியாகவில்லை)

ஜூலை 31 – கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் கொடுத்தது, முகாம் அலுவலகத்திற்கு மதுபோதையில் வந்தது குறித்து தலைமைச் செயலாளருக்கு பெண் ஆட்சியர் புகார் அளித்திருந்தார்.

நவம்பர் 9- கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து முதல்முதலில் திமுக எம்பி கனிமொழிதான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

கனிமொழி வெளியே கொண்டு வந்ததும் முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

நவம்பர் 10- தான் ஆட்சியருக்கு எந்த ஆபாச மெசேஜும் அனுப்பவில்லை. அவருக்கு தொகுதி தொடர்பான பொதுமக்களின் மனுக்களை மட்டுமே பார்வேர்டு செய்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் என அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்தார்.

தவெக அமைச்சர்கள், எந்த விசாரணையும் நடத்தாமலேயே எம்எல்ஏ அருள் விக்னேஷ் அப்படி செய்யவில்லை என முட்டு கொடுத்தனர்.

நவம்பர் 11- தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்டினார். இதனால் அன்றைய தினம் அருள் விக்னேஷ் மீது விஜய் கண்டிப்பார் அல்லது ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு பட்டு வேட்டி சட்டையை பரிசாக கொடுத்தனுப்பினார்.

நவம்பர் 15- பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தது.

நவம்பர் 23- பெண் ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி புகார் கொடுத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், பாதிக்கப்பட்ட அதிகாரி புகார் கொடுக்காமல் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார்.

நவம்பர் 23 – பெண் ஆட்சியருக்கு தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்திருந்தார். அது முதல் இந்த வழக்கு சூடு பிடித்தது.

நவம்பர் 24- கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது.

யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்கக் கூடாது என ஹைகோர்ட் நீதிபதி லட்சுமி நாராயணன் கடும் கண்டனம்

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் நியமனம். மேற்பார்வை அதிகாரியாக காமினி நியமனம்.

நவம்பர் 25- அருள் விக்னேஷுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சம்மன்.

திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்த சிருஷ்டி சிங்

பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சிருஷ்டி சிங் விசாரணை

அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்

நவம்பர் 26- இரண்டாவது நாளாக ஆட்சியரிடம் விசாரணை நடத்திய சிருஷ்டி சிங் ஐபிஎஸ்.

கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி பெண் ஆட்சியர் வாக்குமூலம்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவின் கச்சிராயப்பாளையத்தில் போலீஸ் குவிப்பு- கடந்த 3 தினங்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி ஆளுநர் அர்லேகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்

நவம்பர் 27- கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை அவரது வீட்டில் வைத்து சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் அருளை கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *