தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற மற்றும் அவைக்குறிப்பிற்கு மாறான வார்த்தைகள் இடம்பெறும்போது, மரபுப்படி அவைத் தலைவரால் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன.
கடந்த ஆட்சியில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பில்லாமல் இருந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்புவதைத் தவிர்த்து, கூச்சலிடுவதிலும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், ஆளுங்கட்சி தரப்பில் மக்கள் பிரச்னைகளுக்கும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் அனைவரும் உரிய பதில்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிதி நிலைமையை ஆராயாமல் விளம்பரத்திற்காக மட்டுமே அறிவிக்கப்பட்டன.
இதில் தொடங்கப்படாத திட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவினங்கள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்படும் கான்பிடென்ஷியல் நடவடிக்கைகளையும், தணிக்கை விவரங்களையும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் அதிகாரிகளைப் பயன்படுத்தி வேவு பார்ப்பது கண்டறியப்பட்டுள்ளது.