அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 14 மாத பேரக்குழந்தை ஜஹ்ராவின் சிறு சவப்பெட்டி – கண்ணீரில் தெஹ்ரான்

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமனியின் இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை துவங்கின.

ஆறு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப் பயணத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பங்கேற்று தங்கள் 86 வயது தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தெஹ்ரானில் உள்ள பிரம்மாண்டமான கிராண்ட் மொசல்லா வளாகத்திற்குள் காமெனெயியின் சவப்பெட்டி கொண்டுவரப்பட்டது. இஸ்லாமியக் குடியரசின் கொடியால் போர்த்தப்பட்டு, அதன் மேல் அவரது கருப்பு தலைப்பாகை வைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த அவரது உறவினர்களின் உடல்களும் அருகே வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அவரது 14 மாதப் பேரக்குழந்தையான ஜஹ்ரா முகமதி கோல்பயேகானியின் சிறிய சவப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது காண்போரை கலங்கச் செய்தது.

இந்த இறுதி நிகழ்விற்காக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வளாகத்திற்கு வெளியே காத்திருந்தனர். அடுத்த மூன்று நாட்களில் தெஹ்ரானில் மட்டும் சுமார் 1.5 முதல் 2 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

ஈரானின் உயர்மட்ட அதிகாரிகளும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப், கண்ணீர் மல்கக் காணப்பட்டார்.

காமனியியுடன் கொல்லப்பட்ட புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தளபதிக்குப் பதிலாக, அப்படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அகமத் வஹிதியும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த இறுதி நிகழ்வில், இந்தியாவின் சார்பில் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

திட்டத்தின்படி, காமெனெயியின் உடல் திங்கட்கிழமை வரை தெஹ்ரானில் வைக்கப்பட்டு, பின்னர் நகர்வலம் நடைபெறும். செவ்வாயன்று மத முக்கியத்துவம் வாய்ந்த கோம் நகருக்கும், புதன்கிழமை அண்டை நாடான ஈராக்கின் புனித நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படும். இறுதியாக, வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்த இறுதி நிகழ்வுகள், ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *