தங்கம், வெள்ளி விலை அதிகரித்து இருக்கிறதா… குறைந்து இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அலுமினியம் சத்தமே இல்லாமல் நேற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
“நேற்றைய சந்தையில், அலுமினியம் 4 வருட உச்சத்திற்கு அருகே வர்த்தகமாகியது.
முக்கியமாக, லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டன் அலுமினியம் 3,500 – 3,600 டாலர்களுக்கு வர்த்தகமாகியது.
இந்தியாவில் MCX-ல் ஒரு கிலோ அலுமினியம் ரூ.370 – 380-க்கு வர்த்தகம் ஆகி வருகிறது.

ஏன் இந்தத் திடீர் ஏற்றம்?
ஹார்முஸ் ஜலசந்தி மூடலால், சந்தையில் அலுமினியம் சப்ளை குறைவாகுமோ என்கிற அச்சத்தில் தான் அலுமினியம் இந்த ஏற்றத்தைச் சந்தித்துள்ளது.
ஒரு டன்னுக்கு 3,000 டாலர் என அலுமினியம் நிலைபெறும் என்கிற எதிர்பார்ப்பு சந்தையில் இருக்கிறது.
எப்படி முதலீடு செய்யலாம்?
இந்திய சந்தையில் MCX-ல் அலுமினியம் மினி கான்ட்ராக்ட், மெகா கான்ட்ராக்ட் என்று இருவகைகள் உண்டு.
மினி கான்ட்ராக்ட் அளவும் குறையும், விலையும் குறைவு. ஒருவேளை, இப்போது அலுமினியத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மினி கான்ட்ராக்ட்டில் விலை மற்றும் ஆய்வை வைத்து முதலீடு செய்யலாம்.