அல்பேனியா மாரத்தான் போட்டியில் 3-வது இடம்.. ரொக்கப் பரிசு வென்று தமிழக வீரர் நியாஸ் கான் அசத்தல்! | Tamil Nadu-Origin Runner Niyas Khan Wins Third Place at Tirana Marathon 2026 in Albania

Spread the love

International

oi-Shyamsundar I

திரானா: அல்பேனியா நாட்டின் தலைநகர் திரானாவில் நடந்த 10-வது சர்வதேச மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நியாஸ் கான் 3-வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Tirana Marathon 2026

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நியாஸ் கான், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வசித்து வருகிறார். நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான இவர், உலக அளவில் நடைபெறும் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

Tirana Marathon 2026

இந்த நிலையில், கடந்த நவம்பர் 15-ம் தேதி அல்பேனியாவின் திரானா நகரில் 10-வது ஆண்டாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் நியாஸ் கான் கலந்து கொண்டு ஓடினார். விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், இலக்கை வேகமாகக் கடந்து ஒட்டுமொத்தப் பிரிவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் பதக்கத்துடன் ரொக்கப் பரிசையும் அவர் வென்றுள்ளார்.

Tirana Marathon 2026

விடாமுயற்சியும், தினசரிப் பயிற்சியுமே தனது வெற்றிக்குக் காரணம் என நியாஸ் கான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உலகின் மிக முக்கியமான 6 பெரிய மாரத்தான் போட்டிகளையும் (Abbott World Marathon Majors) வெற்றிகரமாக ஓடி முடித்து, ‘சிக்ஸ் ஸ்டார் பினிஷர்’ (Six Star Finisher) என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Tirana Marathon 2026

அல்பேனியா மாரத்தான் வெற்றியின் மூலம் தமிழகத்திற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நியாஸ் கானுக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tirana Marathon 2026

Tirana Marathon 2026

Tirana Marathon 2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *