Doctor Vikatan: வெயில் காலத்தில் கண்களுக்கு கட்டாயம் கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா… சூரிய ஒளி கண்களில் நேரடியாகப் பட்டால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா? சாதாரண கண்ணாடி போதுமா, கூலிங் கிளாஸ்தான் அணிய வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய்ஷங்கர்.

அதிகப்படியான வெயில் கண்களைப் பல வழிகளில் பாதிக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV rays) கண்களை பாதித்து பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமான பாதிப்பு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை (Cataracts). புறஊதா கதிர்கள் கண்களில் கண்புரை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.