“அழாதேம்மா… வயித்துல இருக்குற பாப்பா கிண்டல் செய்யும்!" – ஓர் உன்னத மருத்துவர்

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இதயத்துடிப்பைக் கேட்டுப் பார்த்து இன்சொல் மருந்து தருபவர்..

மனோ தத்துவமறிந்தவர்..

உடற்காயம் மட்டுமின்றி மனக் காயத்தையும் ஆற்றிடும் மாண்பாளர்..

முதியோர் நலனில்  அக்கறை கொண்ட மாமனிதர்…

கடவுளை நம்பாதவர்களையும் கடவுள் அவர் ரூபத்தில் இருக்கார் என்று உணர வைப்பவர்…

கடுமையான நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சித்தரவர்…

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்றிற்குப் பெயர்போனவர்..

 !உயிர்காக்கும் உன்னத சேவையை உயிர்மூச்சாக செயல்படுத்தும் உன்னதமானவர்!

அவர்தான் எங்ககுடும்பநல மருத்துவர் 

திரு எஸ் சிவசண்முகவேல் அவர்கள்.

‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.’

‘உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்.’

இந்த இரண்டு திருக்குறளையும் திருவள்ளுவர் இவரை நினைத்துத் தான் எழுதி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு இருக்கும் அவரின் செயல்பாடுகள்.

.

அவருக்கும் எனக்குமான முதல் சந்திப்பு 35 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

 நான்மட்டைத் தேங்காய் உரிக்கும்போது  இடது கட்டை விரல் அரிவாளில் பட ரத்தம் பீறிட….  எதிர் வீட்டு நிர்மலா ஆன்ட்டி இவரிடம் அழைத்துச் சென்றார் .(நான் அப்போது 8மாதக் கர்ப்பம்)  

முதல் சந்திப்பு… நான் அழுவதைப் பார்த்த அவர் அழாதேம்மா! மருந்துபோட்டால் விரைவில் குணமாகும் என்றுசொல்லி… நீ அழுதால் வயிற்றுக்குள் இருக்கும் பாப்பா   கிண்டல் செய்யும்… பரவாயில்லையான்னு  பேச்சுக் கொடுத்துக்கொண்டே  தையல் போட்டு என்னை ஆசுவாசப் படுத்தினானர்.

அவரின் அந்த அன்பான,தைரியமூட்டிய பேச்சு இன்னமும் என் காதுகளில் ஒலிக்கிறது.

அதன் பிறகு  உடலளவில்/ மனதளவில் எதுவாக இருந்தாலும் அவரிடம் ஓடோடிச் சென்று  முறையிட, அவர் சொல்லும் வார்த்தைகளில் எனக்கான தீர்வு கிடைத்து விடும்.

கொரோனா  நேரத்தில்  எந்தப் பிரச்சினைன்னாலும்  அலைபேசியில் தொடர்பு கொள்ள உடனடியாக அதற்கானமருந்துகளை பரிந்துரைத்தவர்.

அந்த இக்கட்டான சூழலில்

 உடல் அளவிலும், மனதளவிலும் மிக மோசமான பாதிப்புகளைஅவர் எதிர்கொண்டாலும் தன்னைத்தானே’ மோட்டிவேட்’ செய்துகொண்டு பணியைத் தொடர்ந்த உன்னதமானமாமனிதர்

மொத்தத்தில்  ‘வாம்மா ஆதிரை ‘என கூப்பிட்டு என் மேல் கொள்ளைப் பாசம் வைத்திருக்கும்  ‘இன்னொரு ‘அம்மா’

என் உடல் நலனில் அக்கறை காட்டும் இன்னொரு ‘அப்பா’ 

என்னுள் ‘உன்னால் முடியும் ‘என்ற தன்னம்பிக்கை விதை முளைக்க வைக்கும் இன்னொரு ‘ஆசான்’ 

என்றுமே என் வாழ்க்கையின் நலன் விரும்பியாக இருக்கும் என் நேசமிகு ‘ நண்பன்’ 

என்னை மட்டுமல்ல… 

யாரை பார்த்தாலுமே அவர் பேசும் 

 முதல் வார்த்தை

 ‘வாங்கம்மா’, ‘வாங்க ஐயா ‘,

இப்ப’எப்படி இருக்கீங்க’

இந்த மூன்றுதான். 

அவர் இப்படி கேட்கும் போதே நம் உடம்பில் வலி பாதி குறைந்துவிடும்.

“ஒவ்வொரு கதவு மூடப்படும் போதும் மற்றொரு கதவு திறக்கும். மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தால் திறக்கும் கதவு தெரியாது.சில கதவைத் திறக்க முயற்சியும்,சில கதவைத் திறக்க பொறுமையும் அவசியம்.எந்தக் கதவையும் திறக்க தன்னம்பிக்கை மிகமிக அவசியம். 

கதவைத் திறக்க நீயே முயற்சிசெய்

.உன்னால் முடியும் ஆதிரை” என்பார்.  

லவ் யூ டாக்டர். லவ் யூ சோ மச்.

வருடம் நீங்க நல்லா இருக்கணும் கண்டிப்பா நல்லா இருப்பீங்க..

நீங்க நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருப்போம்.

அழகான

 மருத்துவர் தின நல்வாழ்த்துகள் டாக்டர்.

என்றென்றும் அன்புடன் 

ஆதிரை வேணுகோபால்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *