ஆகஸ்ட் 5 பட்ஜெட் தாக்கல்: திமுக எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை…! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்த  நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி  முதல் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளனர்.  தமிழக வெற்றி கழகத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் அனைவரும் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது இதில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் இடம்பெற உள்ளது என்பது குறித்து அனைவரும் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், பட்ஜெட் கூட்டத் தொடரில் எந்தப் பிரச்சனைகளை முன்னெடுக்க வேண்டும் மற்றும் விவாதத்தின் போது யார் யார் பேச வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். இதற்காக திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *