அதற்குப் பதில் தந்த அசோக் செல்வன், “நாங்க இரண்டு வருஷம் கடினமாக உழைத்துத் தான் ஒரு படத்தை எடுத்திருக்கோம். ஆனா, அந்த முத்தக் காட்சியைப் பத்தியே ஏன் மூணு பேர் கேட்குறீங்க? எனக்கு உண்மையிலேயே புரியல.
அதைத் தவிர வேற எதுவுமே உங்களுக்குக் கேட்கத் தோணலையா? படம் குறித்து ஏதேனும் நல்ல கேள்விகள் இருந்தா கேளுங்க, பேசலாம்.” எனப் பதிலளித்தார்.

அடுத்து ஆக்ஷன் படங்கள் செய்வது பற்றிய திட்டம் குறித்து அசோக் செல்வன், “‘ப்ளூ ஸ்டார்’ படத்திலயும் கதைக்கு என்ன தேவையோ, அதைத்தான் செய்திருந்தோம். எல்லாமே கதைதான் முடிவு செய்யும்.
அடுத்து ஒரு காதல் கதையில நடிக்க நேர்ந்தால், அதில் ஆக்ஷனே இல்லை என்றாலும் நடிக்க நான் தயார். ‘ஆக்ஷன் ஹீரோவாக’ மாறணும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குக் கொடுக்கணும், அவ்வளவுதான். ஆக்ஷன் களத்தை நான் இதுவரை பெருசா முயற்சித்துப் பார்த்ததில்லை, அதனால் இதில் முயற்சி செய்து பார்க்கலாம்னு தோணுச்சு, பண்ணியிருக்கேன்.” எனப் பதில் தந்தார்.