`ஆங்கிலம் பேச 175 கிளைகளோட ஒரு நிறுவனமானு வியந்தாங்க, இப்ப‌ ஒரேயொரு சென்டர்தான்!’- ‘Veta’ ராஜகோபாலன்

Spread the love

“என்ன, என்னை ஞாபகம் இருக்கா’ என கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியா பக்கம் ஒரு குரல். வீடியோக்குள் போனால், அட, நம்ம ‘வீட்டா’ ராஜகோபாலன்.

ஆங்கிலம் பேசறதுக்குன்னே ஒரு இன்ஸ்ட்டியூட்டை நிறுவி பெரிய அளவுல நடத்திட்டிருந்தாரே அவரேதான்.

‘இவ்ளோ நாள் எங்க போயிருந்தீங்க. இப்பவும் ஸ்போக்கன் இன்ஸ்டியூட் போயிட்டிருக்கா’ உள்ளிட்டக் கேள்விகளுடன் அவரிடம் பேசினோம்.

”நன்னிலத்துல பெரியப் பணக்காரக் குடும்பப் பின்னணி. ஆனா சொத்துப் பிரச்னையில ஆளாளுக்குப் பகையாகி சொத்தும் கரைஞ்சு பஞ்சம் பிழைக்க வந்த மாதிரி சென்னைக்கு அம்மா, தம்பி, தங்கையோட வந்தேன். நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு வீடு பிடிச்சோம். பேப்பர் போட்டதுதான் என்னுடைய முதல் வேலை. அமைச்சர் வீடுகளுக்குப் பேப்பர் போட்டதுல அமைச்சர் ராகவானாந்தம் கிட்ட அறிமுகமானேன். ஹெல்த் டிபார்ட்மென்ட்ல ஒரு டெம்ப்ரவரி அட்டெண்டர் வேலை இருக்குன்னு சிபாரிசு செஞ்சார்.

அந்த வேலையை செஞ்சுகிட்டே லயோலா காலேஜ்ல பியூசி சேர்ந்தேன். பொருளாதாரம் எனக்குப் பிடிச்ச பாடம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *