பாலினப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்பட்ட மரபியல் அறிஞர் – X-Y குரோமோசோம் கண்டுப்பிடிப்பின் கதை | My Vikatan article about XY chromosome discovery

Spread the love

பாலின குரோமோசோம்கள் குறித்த நெட்டியின் ஆய்வு வெளியான அதே 1905 ஆம் ஆண்டில், அதே தலைப்பில் நெட்டியின் ஆராய்ச்சியை தவறாக புரிந்து கொண்ட பேராசிரியர்  எட்மண்ட் பீச்சர் வில்சனின் ஆய்வு கட்டுரையும்   வெளியிடப்பட்டது. எனினும், Y குரோமோசோம் தான் பாலினத்தைத் தீர்மானிக்கிறது என உறுதியாகக் சுட்டிக்காட்டிய முதல் நபர் நெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வாழ்க்கை முழுவதும்  ஆராய்ச்சி பணியை தொடர்ந்து  மேற்கொண்ட நெட்டி, ஹெட்டிரோ குரோமோசோம்களை முதன்முதலில் அடையாளம் கண்டார். இதன் மூலம், பாலின குரோமோசோம்களைக் கண்டுபிடித்தவர் என்ற தனது  அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.  ஆராய்ச்சியின் தீவிரமும், பாலின குரோமோசோம்கள் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியும்  நெட்டியின் ஆழ்ந்த அறிவுக்கு   காரணங்களாக இருந்தன.

1912-ஆம் ஆண்டில், பிரின் மாவரில் ஆராய்ச்சிப் பேராசிரியர் பதவியைப் பெற்ற நெட்டி  அப்பணியில்   சேர்வதற்கு முன்பே தனது ஐம்பதாவது வயதில்  மார்பகப் புற்றுநோயால் இறந்தார். பாலின கோட்பாடுகளுக்கு வலு சேர்த்த நெட்டி அக்காலத்தில் நிலவிய பாலின பாகுபாடுகளால் மற்ற பெண் அறிவியலாளர்கள் போலவே வரலாற்றிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார். 1906-ஆம் ஆண்டு, வில்சன், தாமஸ் ஹன்ட் மோர்கன் ஆகியோர் பாலின நிர்ணயம் குறித்த தங்கள் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர்.

நெட்டியின் குரோமோசோம் வழி மரபுக் கோட்பாடு நிரூபிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்றுக்கொள்ளப்பட்டபோதிலும், நெட்டியின் ஆராய்ச்சிப் பணிக்காக அவரது முனைவர் பட்ட மேற்பார்வையாளரான தாமஸ் ஹன்ட் பாராட்டப்பட்டார். “மரபுவழியில் குரோமோசோமின் பங்கு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக” ஹன்ட்டிற்கு 1933-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1910-ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட பதினெட்டு பெண்களில் ஒருவராக, ஸ்டீவன்ஸ் முதல் 1000 “அறிவியல் மேதைகள்” பட்டியலில் சேர்க்கப்பட்டார். தனது பதினோரு ஆண்டு கால ஆராய்ச்சிப் பணியில் 38 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். நெட்டியின்  ஆராய்ச்சி பணி இல்லாமல்  போயிருந்தால், டர்னர் மற்றும் டவுன் சிண்ட்ரோம்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஏற்பட்ட  முன்னேற்றங்கள் முடங்கி இருக்கும்.  அமெரிக்க தேசிய மகளிர் புகழரங்கத்திலும், வெஸ்ட்ஃபீல்ட் மாநிலப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் நெட்டி மரியா ஸ்டீவன்ஸ் அறிவியல் மற்றும் புத்தாக்க மையத்திலும் தற்போது நெட்டி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *