“வாணி ராணி’, ‘அழகு’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தில் இரு தரப்பிலும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
சீரியல்கள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்த சாரா ஒருகட்டத்தில் சொந்தமாக மேக் அப் ஸ்டூடியோ தொடங்கி செலிபிரிட்டிகள் மேக் அப், மேக் அப் பயிற்சி வகுப்பு எனப் பிசியாக இருந்தார்.
இந்தச் சூழலில் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் வைத்து இவருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் திருமணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பாக நேசன் தன்னை ஏமாற்றி தன் நகைகளையெல்லாம் பறித்துச் சென்று விட்டதாகக் கூறிய சாரா, நேசன் மீது போலீஸில் புகாரும் கொடுத்தார்.
அந்தச் சமயத்தில் சாராவிடம் நாம் பேசியிருந்தோம்.

”திட்டமிட்டு என்னை ஏமாத்திருக்குது நேசன் குடும்பம். மேட்ரிமோனி மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். அந்த டாகுமென்ட்ஸ்னு சில பேப்பர்களைக் காமிச்சார். ரெண்டு பையன்களுடன் கஷ்டப்படுகிறவர்னதும் எனக்கு அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உருவாச்சு. அப்பக்கூட வரதட்சனையா இருநூறு சவரன் வரை கேட்டாங்க. என்னால நூறு வரைக்கும் போட முடியும் சொன்னேன். அதுக்குச் சம்மதிக்கவே கல்யாண ஏற்பாடு நடந்துச்சு.
கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீவெட்டிங் ஷூட்டுக்காக நான் கிளம்பி சிங்கப்பூர் போனேன். அங்க போன பிறகே இவர் பத்தி நிறைய அதிர்ச்சித் தகவல்கள் எனக்குத் தெரிய வந்துச்சு.