ஆடையின்றி நிர்வாணமாக கிடந்த இளம்பெண்.. நைட் கிளப்பில் பவுன்சர்கள் செய்த செயல்.. ஷாக் வீடியோ | Woman allgedly stripped and beaten by bouncers at a guwahati club

Spread the love

India

oi-Nantha Kumar R

கவுஹாத்தி: கவுஹாத்தி நைட்கிளப்பிற்கு சென்ற இளம்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து தரையில் படுக்க வைத்து பெண் பவுன்சர்கள் அவரை தாக்கி, மிதித்தது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

woman-allgedly-stripped-and-beaten-by-bouncers-at-a-guwahati-club

அசாம் தலைநகர் கவுஹாத்தியின், கானரா என்ற ஏரியா இருக்கிறது. இங்கு நைட்கிளப் செயல்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம் வயதினர் உள்பட அங்கு சுற்றுலா செல்லும் பலரும் நைட்கிளப்பிற்கு சென்று வருகின்றனர்.

இன்று காந்தி ஜெயந்தி, நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்று தொடர் விடுமுறையையொட்டி நேற்று நைட்கிளப்பில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானவர்கள் நைட்கிளப்பில் குவிந்தனர்.

இந்நிலையில் தான் இன்று காலையில் வீடியோ ஒன்று இணையதளங்களில் பரவி வருகிறது. கவுஹாத்தியின் கானரா ஏரியாவில் நைட்கிளப்பிற்கு சென்ற இளம்பெண் உடலில மேலாடைகள் இன்றி தரையில் படுத்து கிடக்கிறார். அவரை சுற்றி 2 பெண் பவுன்சர்கள் உள்ளன. அதேபோல் சில இளைஞர்களும் உள்ளனர்.

அந்த வீடியோவில் பெண் பவுன்சர்கள், ஆடையின்றி கிடந்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்துவதோடு, மிதித்து தள்ளுகின்றனர். அதேபோல் இன்னொரு வீடியோவில் பார்க்கிங் இடத்தில் வைத்தும் அந்த பெண் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அப்போது அவர் ஆடை அணிந்துள்ளார்.

இந்த வீடியோவை இணையதளங்களில் பார்த்த பலரும் பெண் பவுன்சர்களின் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நைட் கிளப்பில் குடிபோதையில் இருந்த இளம்பெண்ணுக்கும், பெண் பவுன்சர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண், பெண் பவுன்சரை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமான பெண் பவுன்சர்கள் அவரது மேலாடையை கழற்றி தாக்கி அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருவதால் போலீசார் விசாரணை நடத்த தொடங்கி உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே அந்த இளம்பெண்ணின மேலாடைகளை களைந்து பெண் பவுன்சர்கள் தாக்கியது ஏன்? என்பதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *