`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை’ – விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்! | “TVK does not have a majority!” – Governor’s side explanation

Spread the love

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக-வில் இருந்து விலகி 5 இடங்களை வென்ற காங்கிரஸ் தவெக-விற்கு ஆதரவு அளித்திருக்கிறது.

தவெக - காங்கிரஸ் நிர்வாகிகள்

தவெக – காங்கிரஸ் நிர்வாகிகள்

இன்னும் ஆறு இடங்கள் தேவை என்பதால் தவெக சிக்கலில் தவித்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே தவெக தலைவர் விஜய் நேற்று (மே. 6) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.

பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையோடு வாருங்கள் என ஆளுநர் அனுப்பி வைத்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா ரத்தானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *