ஆட்சியருக்கே ஆபாச குறுஞ்செய்தி.. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தலைமறைவு? வீட்டுக்கு போடப்பட்ட பூட்டு! | TVK MLA Arul Vignesh Faces FIR Over Obscene Messages to Woman IAS Officer

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

கள்ளக்குறிச்சி: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அருள் விக்னேஷ் வீட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில் வீட்டின் முன் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டிற்குள் அனுமதியின்றி யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக அவரது வீட்டின் பூட்டு போடப்பட்டுள்ளது.

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தவெக் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்து.

Kallakurichi

இந்த வழக்கின் விசாரணையை வடக்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். அதே நேரத்தில், அருள் விக்னேஷின் கைப்பேசியைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பிஎன்எஸ் எனப்படும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக, BNS பிரிவு 75-ன் கீழ் பாலியல் துன்புறுத்தல், பிரிவு 78-ன் கீழ் பின்தொடர்தல் மற்றும் பிரிவு 79-ன் கீழ் பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

அருள் விக்னேஷ் மீது விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து தொடர்பு கொள்வது, பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஏற்படுத்துவது, ஆபாசமான அல்லது அவமதிக்கும் வகையிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்ற குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்ணின் இணையப் பயன்பாட்டைக் கண்காணித்தல், மின்னஞ்சல் மற்றும் பிற மின்னணு தொடர்புகள் வாயிலாகத் தொடர்ந்து தொந்தரவு செய்தல் போன்ற செயல்கள் தொடர்பாகவும் பின்தொடர்தல் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி எம் எல் ஏ அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு த.வெ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதியபட்ட நிலையில் கைது செய்யபடுவாரா? என நினைத்து ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நேரம் செல்லச் செல்ல அப்பகுதியில் கூடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி போலீசாரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ விக்னேஷின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே திடீரென விக்னேஷின் வீட்டுக்கு பூட்டும் போடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக பூட்டு போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர் விக்னேஷின் உறவினர்கள். இதற்கிடையே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *