ஆட்சி அமைக்க மீண்டும் அழைப்பு விடுத்த காடி ஐசன்கோட்- நெதன்யாகு விதிக்கும் நிபந்தனைகள் என்ன? | Gadi Eisenkot Invites Netanyahu For Talks To Form New Israeli Government

Spread the love

அதேசமயம், ”ஒற்றுமை அரசாங்கம் அமைந்தால் நெதன்யாகுவே பிரதமராக இருக்க வேண்டும்; ‘ஓட்ஸ்மா யெஹுடிட்’ கட்சியையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும்; காசா, லெபனான், சிரியா எல்லைகளில் பாதுகாப்பு மண்டலங்களைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும்” என நெதன்யாகுவின் லிகுட் கட்சி பல நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கிடையே, ஐசன்கோட் தலைமையில் லிகுட் கட்சியையும் இணைத்து ஆட்சி அமைக்க ‘பி’யாச்சத் கட்சித் தலைவர் நஃப்தாலி பென்னட் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ஐசன்கோட் அணியில் உள்ள முக்கியத் தலைவர்களே தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனால், ‘யுனைடெட் தோரா ஜூடைசம்’ கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஒருவேளை பெரும்பான்மைக்கான பெரிய கூட்டணி அமையாவிட்டால், ‘சிறுபான்மை அரசாங்கம்’ அமைப்பது குறித்தும் ஐசன்கோட் ஆலோசித்து வருவதால், இஸ்ரேல் அரசியலில் அடுத்த சில வாரங்கள் பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *