“ஆணாதிக்க சிந்தனை உடையவர்களால் ‘டோரதி’ படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்”- திருமா| vck thirumavalavan praises dorathi movie

Spread the love

“டோரதி’ படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார்.

படம் குறித்து பேசிய அவர், “இன்றைக்கும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் ‘டோரதி’ திரைப்படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்..

மூன்றாம் பாலினத்தவர்களை இந்தச் சமூகம் அருவருப்பாகப் பார்க்கிறது. இழிவாகப் பார்க்கிறது.

அதனால் அவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அல்லது பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார்.

கடுமையாகச் சாடியிருக்கிறார். மூன்றாம் பாலினத்தவர்கள் படும் கஷ்டங்களை டோரதி திரைப்படத்தில் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *