முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அவரது கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்! ஆணவம் அழிவிற்கு வழி” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.