India
oi-Nantha Kumar R
காந்தி நகர்: குஜராத்தில் கால்நடகைளுக்கு தீவனம் வைக்க சென்ற ஒருவரின் மீது சிங்கம் பாய்ந்து தாக்கியது. இதில் பதறிப்போன அந்த நபர் தப்ப முயன்றார். ஆனால் சிங்கம் அவரை விடாமல் 30 நிமிடம் பிடித்து கொண்டு கர்ச்சித்தது. கடைசியில் அந்த நபர் தப்பியது எப்படி? என்ன நடந்தது? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
நம் ஊர்களில் பழமொழி ஒன்று உண்டு.. ”வானில் இருந்து குதித்து பிழைத்தவன் இருக்கான். புல் தடுக்கி விழுந்த செத்தவனும் இருக்கான்” என்று சொல்வதை நாம் பலரும் கேள்விபட்டு இருப்போம்.

அதற்கான அர்த்தம் என்னவென்றால் புயல் போன்ற பெரிய ஆபத்துகள் வரும்போது கூட ஒருவன் தன் திறமை மற்றும் விதியால் உயிர் தப்பிப்பது உண்டு. அதேவேளையில் கால் இடறி சாதாரணமாக விழுபவர்கள் கூற ஒருவர் மரணிப்பது உண்டு என்பது தான்.
இந்நிலையில் தான் குஜராத்தில் ஒருவர் தனது அதிர்ஷ்டம் மற்றும் 30 நிமிட போராட்டத்தால் சிங்கத்திடம் மல்லுக்கட்டி அதன் கோரப்பிடியில் இருந்து விலகி உயிரோடு தப்பிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதுதொடர்பான விவரம் வருமாறு: குஜராத்தி்ன பாவ்நகர் மாவட்டம் பலிடானா தாலுகா கராஜியா கிராமத்தை சேர்ந்தவர் காலுபாய் போகபாய் பார்மர். இவர் வீட்டில் பசுமாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை சுமார் 8.30 மணியளவில் பார்மர் தனது கால்நடைகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது தொழுவத்தில் மறைந்து இருந்த சிங்கம் திடீரென்று பார்மர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் நிலைக்குலைந்து போன பார்மர் தரையில் விழுந்தார். சிங்கத்திடம் இருந்து தப்பிக்க அவர் முயன்றார். ஆனால் அந்த முயற்சி கைக்கொடுக்கவில்லை.
அதுமட்டுமின்றி சிங்கம் அவரது காலை நன்றாக பிடித்து கொண்டு கர்ச்சித்தபடி தரையில் அமர்ந்தது. இதனால் பார்மர் அதிர்ச்சியில் உறைந்து போனார். திக்திக் மனநிலையில் அவர் அப்படியே சிங்கத்திடம் சிக்கியபடி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற கிராமத்தினர் பார்த்து ஷாக்காகினர். உடனடியாக அவர்கள் அனைவரும் திரண்டு வந்து கூச்சலிட்டு சிங்கத்தை விரட்ட முயன்றனர்.
அப்போது பார்மரை ஆக்ரோஷமாக சிங்கம் தாக்கியது. இருப்பினும் சுற்றியிருந்த மக்கள் எழுப்பிய கூச்சலால் திடீரென்று பயந்த சிங்கம் பார்மரை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது. சுமார் 30 நிமிடங்கள் வரை சிங்கத்திடம் சிக்கியிருந்த பார்மர் படுகாயங்களுடன் தப்பினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
LION ATTACKS ON ANIMAL CARE TAKER 🚨
A lioness attacked a Maldhari family near Palitana in Gujarat’s Bhavnagar district.
– Lion trapped the guy for 30 minutes😨
– Look at the guy how he consoles Lion by Touching his head 😭
– After being rescued and rushed to a hospital for… pic.twitter.com/gWYDg9AYkX
— Jeet (@JeetN25) July 6, 2026
இதற்கிடையே தான் பார்மர் சிங்கத்திடம் சிக்கி தவித்ததை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.